கட்டுரை காதை
மதுராபதி
(நிலைமண்டில ஆசிரியப்பா) (மதுராபதித் தெய்வம் கண்ணகியின் தோன்றுகிறது. அவளது பண்டைய வரலாறும், கோவலன் செய்த முன்னால் பழைய பழியும் கூறுகின்றது. கண்ணகியும் மதுரையை விட்டு வெளியேறித் திருச்செங்குன்றினைச் சேர்ந்து, மதுராபதி கூறியபடியே, தன் கணவனுடன் ஒன்றுபடுகிறாள்.
1.மதுராபதி
சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக்,
குவளை உண்கண் தவளவான் முகத்தி; கடைஎயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி; இடைநிலை விரிந்த நித்தில நகைத்தி,
இருமருங்கு இருண்ட நீலம் ஆயினும்,
வலமருங்கு பொன்னிறம் புரையும் மேனியன்!
இடக்கை பொலம்பூந் தாமரை ஏந்தினும்,
வலக்கை அஞ்சுடர்க் கொடுவாள் பிடித்தோள்;
வலக்கால் புனைகழல் கட்டினும், இடக்கால்
தனிச்சிலம்பு அரற்றும் தகைமையள், பனித்துறைக்
கொற்கைக் கொண்கன், குமரித் துறைவன்,
பொற்கோட்டு வரம்பன், பொதியிற் பொருப்பன்,
குலமுதற் கிழத்தி, ஆதலின்-அலமந்து,
ஒருமுலை குறைத்த திருமா பத்தினி,
அலமரு திருமுகத்து ஆயிழை நங்கை-தன்
முன்னிலை ஈயாள் பின்னிலைத் தோன்றிக்
'கேட்டிசின் வாழி, நங்கை! என் குறை' என --
தாழ்ந்த சடையும் இளம்பிறையும் உடைய சென்னியாள்; குவளை மலர் மையுண்டது போன்ற சுண்ணினாள்: வெள்ளிய ஒளிபொருந்திய முகத்தினாள்; கடை எயிற்றிலே ஊறல் அரும்பிய பவளச் செவ்வாயாள்; தம்மிடத்திலே நிலவொளி விரிந்தது போன்ற முத்துப்பற்களை யுடையாள்; இடப்பாகம் இருண்ட நீலமாகத் தோன்றினும், வலப்பாகம் பொன்னிறமாக விளங்கும் மேனியாள் இடக்கையிலே பொன்னிறமான மலர்ந்த தாமரை மலரை ஏந்தியிருப்பினும், வலக்கையிலே மழுப்படையினையும் ஏந்தியிருப்பவள்; வலக்காலிலே தொழிற்பாடுடைய வீரக்கழலைக் கட்டினாலும், இடக்காவிலே ஒற்றைச் சிவம்பு ஒலிமுழங்கும் தன்மையினை உடையாள்; கொற்கைப்பதியின் தலைவனும்,குமரித்துறைக்கு உரிமை உடையவனும் வடவிமயத்தையே தன் ஆட்சிப் பரப்பின் எல்லையாக உடையவனும், பொதியிலாகிய பொருப்பினை உடையவனுமாகிய குலதெய்வம்: ஆதலின் அம் மதுராபதியாள் மனம் வருந்தினாள். தன் ஒரு முலையினைச் குறைத்த திருமாபத்தினி, துன்பத்தால் சுழல்கின்ற திருமுகத்து ஆயிழையாள், நங்கையான கண்ணகியின் முன்னர் தான் வந்தருளாளாகிப், பின்னிலையிலேயே வந்து தோன்றினாள். "நங்காய்! நினக்கென்ன குறை? என் சொற் கேட்பாயானால் வாழ்வாய்!" என்றும் மெல்லக் கூறினாள்.
- இளங்கோவடிகள்
super da
ReplyDeleteThanks da
Delete