Posts

கட்டுரை காதை

மதுராபதி                (நிலைமண்டில ஆசிரியப்பா)                      (மதுராபதித் தெய்வம் கண்ணகியின்    தோன்றுகிறது. அவளது பண்டைய வரலாறும்,    கோவலன் செய்த முன்னால் பழைய பழியும் கூறுகின்றது. கண்ணகியும் மதுரையை விட்டு வெளியேறித் திருச்செங்குன்றினைச் சேர்ந்து, மதுராபதி கூறியபடியே, தன் கணவனுடன் ஒன்றுபடுகிறாள்.                                   1.மதுராபதி சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக், குவளை உண்கண் தவளவான் முகத்தி; கடைஎயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி; இடைநிலை விரிந்த நித்தில நகைத்தி, இருமருங்கு இருண்ட நீலம் ஆயினும், வலமருங்கு பொன்னிறம் புரையும் மேனியன்! இடக்கை பொலம்பூந் தாமரை ஏந்தினும், வலக்கை அஞ்சுடர்க் கொடுவாள் பிடித்தோள்; வலக்கால் புனைகழல் கட்டினும், இடக்கால் தனிச்சிலம்பு அரற்றும் தகைமையள், பனித்துறைக் கொற்கைக் கொண்கன், குமரித் துறைவன், பொற்கோட்டு வரம்பன், பொதியிற் பொருப்பன், குலமுதற் கி...